நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்த செய்தி!

Nila
4 years ago
நிறைவடைந்த  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்த செய்தி!

நேற்றைய தினத்துடன் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையே இலங்கை வரலாற்றில் மிகவும் சிரமமானதும் சவால் மிக்கதுமான சாதாரண தரப்பரீட்சை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளார்,

சில பரீட்சை அதிகாரிகள் சம்பள முரண்பாடுகள் காரணமாக பரீட்சை நிலையத்தின் பணிகளுக்கு சமூகமளிக்காமல் இருந்த நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்த போதிலும், தற்போது அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்,

ஊரடங்கு சட்டம் மற்றும் அமைதியின்மைகளுக்கு மத்தியில் இந்த பரீட்சை நடத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் போக்குவரத்து, அச்சிடுதல் மற்றும் மின் விநியோகத்தடை உள்ளிட்ட பல நெருக்கடிகளும் இதன் போது காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

மேலும் பரீட்சைக்கு தேவையான தாள்கள் மற்றும் சில உபகரணங்களை பெற்றுக் கொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4