இணைய பாவனையாளர்களுக்கு விழுந்த இடி வெளிவந்த தகவல்

Nila
4 years ago
இணைய பாவனையாளர்களுக்கு விழுந்த இடி வெளிவந்த தகவல்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக நேற்று முன் தினம் முதல் இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக்கு  அதிகரிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15%ஆகவும் அதிகரிக்கப்படுமென மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைக் கட்டணங்கள்
இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

என்ற போதும் குறித்த கட்டண அதிகரிப்புக்கான விபரங்கள் தொடர்பிலான அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4