இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு! 39.1 சதவீதத்தை எட்டியது

#MonkeyPox
Mayoorikka
4 years ago
இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு! 39.1 சதவீதத்தை எட்டியது

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியின் தொடராக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, இலங்கையின் பணவீக்கம் மே மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 29.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, இந்த மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் 46.6 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம், இந்த மாதம் 57.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஏப்ரலில் 22 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், இந்த மாதம் 30.6 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25.1 சதவீதமாக காணப்பட்ட ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கம், இந்த மாதம் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருளுடன் தொடர்புடைய பணவீக்கம், ஏப்ரலில் 8.1 சதவீதத்திலிருந்து, மே மாதம் 13.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஏப்ரலில் 68.2 சதவீதமாக பதிவாகியிருந்த போக்குவரத்துடன் தொடர்புடைய பணவீக்கம், மே மாதம் 91.5 சதவீமாக அதிகரித்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4