சவுதி போன்ற தண்டனையே கொடூர செயல்களை குறைக்கும்
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

சவுதி அரேபியாவில் தண்டணைகள் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள், நம்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பண்டாரகம- அட்டுலுகம பகுதியில் மலரும் முன் காய்ந்து சருகாகி காற்றில் கலந்த சிறுமி ஆயிஷாவின் நிலைமைக்கு காரணமான கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். சவுதியில் போன்று, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஆயிஷாவின் பேரிழப்பே இவ் அவலங்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.



