செலுத்தப்படாத கடன்கள் தொடர்பில் மக்கள் வங்கியின் அறிவிப்பு

#SriLanka #People's Bank
செலுத்தப்படாத கடன்கள் தொடர்பில் மக்கள் வங்கியின் அறிவிப்பு

செயற்படாத சொத்துக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, செலுத்தப்படாத கடன்கள் (NPLs) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முறையாக மறுநிதியளிப்பு செய்யப்படாத கடன்களாகும். இது எந்த வகையிலும் கடன் வெட்டு அல்ல எனவும் மக்கள் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதனை மீட்பதற்கான சாத்தியமான அனைத்து வழிகளும் முற்றாக தோல்வியடைந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.

வங்கியின் செயல்படாத சொத்துகளின் போர்ட்ஃபோலியோ கடந்த இரண்டு தசாப்தங்களாக வழங்கப்பட்ட பல்வேறு கடன் வசதிகளைக் கொண்டுள்ளது. எனவே, எந்த கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று மக்கள் வங்கி கூறுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4