இலங்கையின் பொருளாதார நெருக்கடி: தமிழகத்தில் அகதிச் தஞ்சம் கோரிய இலங்கை குடும்பம்!

Mayoorikka
4 years ago
இலங்கையின் பொருளாதார நெருக்கடி: தமிழகத்தில் அகதிச் தஞ்சம் கோரிய இலங்கை குடும்பம்!

கொழும்பைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகத்திற்கு சென்று அகதி தஞ்சம் கோரியுள்ளனர். 

கொழும்பைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி , அவரது 10 வயதுடைய மகன் மற்றும்  மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தஞ்சமடைந்துள்ளனர். 

குறித்த மூவரும் மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றைய தினம் இரவு, படகொன்றில் சென்று இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த மண்டபம் கடலோர காவல் படையினர் மூவரையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்றைய தினம் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையில் 83 பேர் கடல் மார்க்கமாக தமிழகம் சென்றுள்ளனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4