தெமடகொட புகையிரத நிலையத்தில் பெண் ஒருவர் கொலை: மூவர் மாயம்

Prathees
4 years ago
தெமடகொட புகையிரத நிலையத்தில் பெண் ஒருவர் கொலை: மூவர் மாயம்

தெமடகொட புகையிரத நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றை நடத்தி வந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 29 ஆம் திகதி இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் வைத்திருந்த மூன்று தங்க நகைகள், மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் உணவகத்தில் கடமையாற்றிய மூன்று ஊழியர்கள் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4