ஜனாதிபதி மற்றும் ஆளும் தரப்பின் எம்.பிக்களுக்கு இடையில் இன்று சந்திப்பு!

Reha
4 years ago
ஜனாதிபதி மற்றும் ஆளும் தரப்பின் எம்.பிக்களுக்கு இடையில் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டமூல வரைவில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகுவதை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு முறுகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4