சிறுமியின் மரணம் குறித்து விசாரணை

#SriLanka #Lanka4
Shana
4 years ago
சிறுமியின் மரணம் குறித்து விசாரணை

பண்டாரகம - அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போன நிலையில் உயிரிழந்த 9 வயது சிறுமியின் மரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சிறுமியின் மரணம் கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சம்பவம் தொடர்பில் இதுவரை இருபது பேரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

சிறுமி நேற்று காலை அவரது வீட்டிலிருந்து கடையொன்றுக்கு சென்ற வேளையே காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4