கோட்டா கோ கம பேரணியில் பதற்ற நிலை பொலிஸார் குவிப்பு!

Nila
4 years ago
கோட்டா கோ கம பேரணியில் பதற்ற நிலை  பொலிஸார் குவிப்பு!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 50வது நாளை எட்டியது.

இந்நிலையில் இன்றையதினம் கொள்ளுப்பிட்டிருந்து காலிமுகத்திடல் கோட்டா கோ கம வரை மக்கள் பேரணி இன்று மாலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பதற்றமான நிலையும் தோன்றியது.

இதேவேளை குறித்த பேரணியில் சிவில் அமைப்புகள் மாணவர் ஒன்றியம் தொழிற்சங்கங்கள் மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தற்போது ஆர்ப்பாட்ட காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பதற்றமான நிலை அங்கு காணப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4