யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு வயோதிப பெண்கள்

Nila
4 years ago
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு வயோதிப  பெண்கள்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 76 மற்றும் 73 வயதுடையர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
 
குறித்த வீட்டில் இருவர் மட்டுமே வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவிக்கு யாரும் இல்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
உயிரிழந்தவர்கள் மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4