நாட்டில் ஆறு மாதங்களில் ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும்

Prathees
4 years ago
நாட்டில் ஆறு மாதங்களில் ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும்

ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை, இலங்கை நுகர்வுக்காக அதிக அளவு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பருவ காலத்திலும் நாட்டில் போதியளவு நெல் அறுவடை கிடைக்காமையே இதற்குக் காரணம்.

மஹா பருவத்தில் நெல் அறுவடை 50 வீதமாக குறைந்துள்ளதாகவும், ஒட்டு மொத்த நெல் அறுவடை எதிர்வரும் ஓராண்டு காலத்தில் இன்னும் குறைவடையும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலைமை காரணமாக ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா  தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4