யாழில் சீராகின்றது எரிபொருள் நெருக்கடி!

Mayoorikka
4 years ago
யாழில் சீராகின்றது எரிபொருள் நெருக்கடி!

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நேற்று ஒரு லட்சத்து 32 ஆயிரம் லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனால் இன்றுடன் யாழ்.குடாநாட்டில் பெற்றோல் விநியோகம் சீராகிவிடும் என்று கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக பெற்றோல் மற்றும் டீசல் உட்பட எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

மக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் பலமணி நேரமாகக் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த நிலைமை சற்றுச் சீரடைந்துள்ளது. எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் சீராக மேற்கொள்ளப்படுவதால் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் மக்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றது. அதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிராது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4