இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்க தயாராக உள்ள இந்தியா!

Prabha Praneetha
4 years ago
இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்க தயாராக உள்ள இந்தியா!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் இந்திய நிதி அமைச்சரும் நேற்று மாலை சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பின் நிலையை இருவரும் மதிப்பீடு செய்தனர்.

ஏற்கனவே இருவரும் கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் சந்திப்பை நடத்தியிருந்தனர்.

நேற்றைய சந்திப்பின்போது உயர் ஸ்தானிகர் மொரகொட, இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் சீதாராமனிடம் விளக்கினார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார வேலைத்திட்டம் இறுதி செய்யப்படும் வரை இலங்கைக்கு இணைப்பு நிதி தேவைப்படும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவு இருப்பு ஆதரவு போன்ற வடிவங்களில் இந்தியா வழங்கும் உதவிகளை அதிகரிப்பது மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அமைச்சரும் உயர் ஸ்தானிகரும் ஆராய்ந்தனர். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4