அமெரிக்காவில் மருத்துவரின் சொகுசு வாகனத்தை எடுத்து ஊர் சுற்றிய ஊழியர்

Prasu
3 years ago
அமெரிக்காவில் மருத்துவரின் சொகுசு வாகனத்தை எடுத்து ஊர் சுற்றிய ஊழியர்

அமெரிக்காவின் பிரபல மருத்துவர் ஒருவரின் சொகுசு காரை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு பார்க்கிங் ஊழியர் ஒருவர் ஊர் சுற்றிய சம்பவம் நடந்துள்ளது. 

நியூயோர்க்கில் வசிக்கும் பிரபல மருத்துவர் மைக் இவர் விலை உயர்ந்த லம்போர்கினி கார் ஒன்றை வைத்துள்ளார்.

 கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தான் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் கார் நிறுத்துமிடத்தில் தனது காரை இரவு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் அங்கு வாகனங்களை நிறுத்திய மற்ற நபர்கள் தங்கள் வாகனங்களை எடுப்பதற்காக பார்க்கிங் ஊழியரை  தேடியுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் அந்த சொகுசு குடியிருப்பின் பாதுகாப்பு ஊழியர் அங்குள்ள CCTv காட்சிகளை சோதனை செய்துள்ளார். 

அப்போது அதில் அந்த குடியிருப்பின் பார்க்கிங் ஊழியர் மருத்துவர் மைக்கின்ன் விலை உயர்ந்த லம்போர்கினி காரை எடுத்துக்கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இரவு 1 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு சென்ற அவர் பின்னர் காலை 6 மணியளவில் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். 

இந்த சம்பவம் போலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் இரவு முழுவதும் நியூயோர்க் நகரில் ஊர் சுற்றியது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அவரிடம் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!