260 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப்பொருட்கள் கையளிப்பு
#SriLanka
#Medical
#Lanka4
Shana
3 years ago

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 260 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் இதர மருத்துவப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் கையளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கபினால் இந்த மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவும் கலந்துகொண்டார்.



