இலங்கை விடுத்துள்ள கோரிக்கைக்கு ரஷ்யா பதில்!
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்ய தரப்பு பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் விநியோகங்களைப் பெறுவதன் மூலம் எரிசக்தி நெருக்கடி மற்றும் எரிசக்தி வளங்களின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க கூடியதாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த தினம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



