நாணயச் சபையின் உறுப்பினராகும் நிஹால் பொன்சேகா!

#SriLanka #Lanka4
Shana
4 years ago
நாணயச் சபையின் உறுப்பினராகும் நிஹால் பொன்சேகா!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிப்பதற்கு பாராளுமன்றப் பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (26) நடைபெற்ற பாராளுமன்றப் பேரவைக் கூட்டத்திலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தரணி ஷிரந்தா விஜயதிலக, ஜயந்த எம். சுவாமிநாதன், ஏ.ஏ. மொஹமட் ஃபாத்திஹூ மற்றும் செல்லத்தம்பி சுமித்திரா ஆகியோரை இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர்களாக மீண்டும் நியமிப்பதற்கும் பாராளுமன்றப் பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4