உக்ரைன் - ரஷ்ய போரில் ரஷ்யா தோற்கவில்லை என்றால் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம்!
Nila
3 years ago

உக்ரைன் - ரஷ்ய போரில் ரஷ்யா தோற்கவில்லை என்றால் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று உக்ரைன் அரசியல்வாதி ஒருவர் பீதியை கிளப்பியுள்ளார்.
உக்ரேனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்த மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரேனிய பேச்சுவார்த்தையாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான Mykhailo Podolyak கூறுகிறார்.
உக்ரேனிய தொலைக்காட்சியில் பேசிய Mykhailo Podolyak,
மாஸ்கோ தோற்கவில்லை என்றால் ரஷ்யாவின் புத்துயிர்ப்பும் பேரினவாதமும் பெருகும் என்று எச்சரித்தார்.
இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்றும், மேற்கத்திய நாடுகள் இதை அறிந்திருப்பதாகவும் மேலும் ஆயுதங்களை வழங்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.



