பெட்ரோலை 700 ரூபாவுக்கு விற்பனை செய்தவர் கைது !
Prabha Praneetha
3 years ago

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு எரிபொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிலியந்தலை, கவரபொல பகுதியில் இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான இவர் பிலியந்தலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 180 லீற்றர் டீசல் மற்றும் 7 லீற்றர் பெற்றோலை ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
டீசல் போத்தல் ஒன்றினை 600 ரூபாவுக்கும், பெட்றோல் போத்தல் ஒன்றை 700 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர் இருக்கும் இடம் முற்றுகையிடப்பட்டது.
]



