மற்றொரு மறைந்து வைத்திருந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது

#SriLanka #Fuel #Robbery
மற்றொரு மறைந்து வைத்திருந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது

பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிலியந்தலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 180 லீற்றர் டீசல், 7 லீற்றர் பெற்றோல் மற்றும் எரிபொருளை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

டீசல் பாட்டில் ஒன்று ரூ.600க்கும், பெட்ரோல் பாட்டில் ரூ.700க்கும் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!