எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகம் முன்னெடுப்பு
Prabha Praneetha
3 years ago

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயுவை தாங்கி கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இலங்கைக்கு வரவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
குறித்த கப்பல் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



