20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய செய்தி!

Mayoorikka
4 years ago
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய செய்தி!

நாட்டில், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களை பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும், கடைசி தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே இதை தெரிவித்தார்.

இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

எனினும், 20 - 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாள்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும் நான்காவது டோஸ் பரிந்துரைக்கப்படுகின்றதாக டாக்டர் குருகே மேலும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4