சவேந்திர சில்வா பதவி விலகல்: ஞானக்காவின் கடுமையான உத்தரவு

Mayoorikka
4 years ago
சவேந்திர சில்வா பதவி விலகல்: ஞானக்காவின் கடுமையான  உத்தரவு

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத முக்கிய நபராக வலம் வருபவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அரசியல் அரங்கில் ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனக்கென தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் மே31ம் திகதியுடன் இராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவி விலகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பதவி விலகலின் பின்னணியில் ஞானக்காவின் கடுமையாக உத்தரவு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது ஞானக்காவின் வீடும் ஹோட்டலும் தீக்கிரையானது. இதேவேளை இராணுவப் பிரிவினர் பாதுகாப்பில் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் அதைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஞானக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் இராணுவ தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவும் இதே காரணத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4