சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

Nila
4 years ago
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

இரண்டு மாதங்களுக்கு பின்னர், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை இன்று முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

இதையடுத்து, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், 6 நாட்களுக்குள் எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, 23,022 மெட்ரிக் டன் டீசல், 2,588 மெட்ரிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

அத்துடன், 39,968 மெட்ரிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 7,112 மெட்ரிக் டன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 3,578 மெட்ரிக் டன் ஜெடா 01 ரக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4