நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய 103 பேருக்கு பிணை

Prathees
4 years ago
நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய 103 பேருக்கு பிணை

நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 103 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மேலதிக நீதவான் டி. டி. பிரேமரத்ன இன்று இந்த உத்தரவை  பிறப்பித்துள்ளார்.

இதன்படி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 83 ஆண் சந்தேக நபர்களையும் 20 பெண் சந்தேக நபர்களையும் தலா 300,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ, ஹரிச்சந்திரபுர மற்றும் கந்தவல பிரதேசங்களில் வசிப்பவர்களே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நீர்கொழும்பில் உள்ள பல ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடல், கொள்ளையடித்தல் மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4