அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர் விக்கிரமசிங்க தீர்மானம்

Mayoorikka
4 years ago
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர் விக்கிரமசிங்க தீர்மானம்

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பட்ஜெட் உரையின் போது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். 

2015 அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4