வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது காணாமல் போன இளைஞன் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

Prathees
4 years ago
வீட்டில் டி.வி  பார்த்துக் கொண்டிருந்த போது காணாமல் போன இளைஞன் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரின் பாதி எரிந்த நிலையில் நேற்று முன்தினம்  (24ஆம் திகதி) அனுராதபுரம், தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரம், திஸ்ஸவெவ, தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் வசிக்கும்  21 வயதுடைய ஏ. கே. எம். வபாஸ் என்ற இளைஞர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞன் கடந்த 23ஆம் திகதி இரவு தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், மறுநாள் காலை வீட்டின் அறைகளில் அவர் இல்லாததை அறிந்ததும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனையிட்டு முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் வீட்டின் அருகே உள்ள காப்பு பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் அடித்து கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுர பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்மால் விஜேரத்னவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4