டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLanka #Disease
டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 21,484 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் நாடளாவிய ரீதியில் 1,576 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 21.8 வீத அதிகரிப்பு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 409 ஆகும்.

கம்பஹா மாவட்டத்தில் 171 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 157 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 119 பேரும், கண்டி மாவட்டத்தில் 113 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4