மே 9 வன்முறைச் சம்பவம் – இதுவரை 1808 பேர் கைது

#Protest #Arrest
Prasu
4 years ago
மே 9 வன்முறைச் சம்பவம் – இதுவரை 1808 பேர் கைது

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 1808 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 100 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 1808 சந்தேக நபர்களில் 784 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அன்றைய தினம் 853 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4