கண்களை ஸ்கேன் செய்தால் இதய பாதிப்புள்ளதா என அறியலாம்! வருகிறது புதிய செயற்கை நுண்ணறிவு

#technology #Article #today
கண்களை ஸ்கேன் செய்தால் இதய பாதிப்புள்ளதா என அறியலாம்! வருகிறது புதிய செயற்கை நுண்ணறிவு

கண்களை ஸ்கேன் செய்யும் ஒருவருக்கு, அந்த ஒரு ஸ்கேன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்புள்ளதா, அவருக்கு இதயத்தில் ஏதும் சிக்கல் உள்ளதா என்பதை கண்டறியும் செயற்கை நுண்ணறிவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கண்களிலுள்ள விழித்திரையின் சிறு சிறு ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள், இதயம் சார்ந்த பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்கின்றனர் மருத்துவர்கள். இந்தக் கருத்தை தொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் என்ற பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு ஒன்றை தயார் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

தங்களின் நோக்கமாக, கண்டுபிடிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு, விழித்திரையை ஸ்கேன் செய்யும்போதே அது இதயத்தின் செயல்பாடுகளை கணிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கின்றனர். குறிப்பாக இதயப்பிரச்னைகள் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டுமென திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த கண்டுபிடிப்புக்காக, 5,000 பேர் மத்தியில் விழித்திறை மற்றும் இதயத்தில் எடுக்கப்பட்ட இரு ஸ்கேன்களை ஒப்பீடு செய்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். அதன் முடிவில் செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டிருக்கிறது. அதில் இதய நோயாளிகளின் ரெடினா மற்றும் இதயத்திற்கான தொடர்பு கண்காணிக்கப்பட்டது.

அதன் முடிவாகவே செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டது. இப்போதுவரை எகோ-கார்டியோகிராபி அல்லது எம்.ஆர்.ஐ. ஆகியவை மட்டுமே இதயத்தின் பிரச்னைகளை முன்கூட்டியே கணித்து சொல்பவையாக இருக்கின்றன. அப்படியிருக்க, மருத்துவத் துறையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு புதியதொரு பாதையை வகுக்குமென ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

இந்த விழித்திரை ஸ்கேன், இதயப்பிரச்னைக்கான வாய்ப்புகளை 70-80% துல்லியமாக கணிப்பதாக கூறும் என விஞ்ஞானிகள், முழு இதய ஆய்வுக்கு இந்த முறையையே பயன்படுத்தலாம் என்கின்றனர். ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் அலெக்ஸ் ஃப்ராங்கி கூறுகையில், “இந்த தொழில்நுட்பம், இதயப் பிரச்னைகளை எளிதாக கண்டறிவதற்கான வழிமுறைகளை விரைந்து கண்டறியும். மேலும் விழித்திரை ஸ்கேன் என்பது மிகவும் குறைவான விலையில் செய்யக்கூடிய அளவுக்கு எளிமையான ஒரு ப்ராசஸ்தான்.

ஆகவே அனைத்து கண் பரிசோதகர்களும் இதை தங்களது பரிசோதனை இயந்திரத்தில் ஏற்றிக்கொள்ளலாம். அப்படி ஆகும்போது, மக்கள் மத்தியில் இதன் பயன்பாடு மிக எளிதில் போய் சேரும். சாதாரண கண் பரிசோதனைக்கு செல்லும் ஒருவருக்கு, அவருடைய இதயமும் கண்காணிக்கப்பட்டு சொல்லப்படும் எனும்போது நீண்ட நாள்களாக இதய பாதிப்பை அறியாமலேயே தவிப்போர் பலரும் தங்கள் பிரச்னையை துரிதமாக அறிந்து, பல பிரச்னைகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியும்” என்றுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4