நிதி அமைச்சராக விரைவில் பிரதமர் ரணில் பொறுப்பேற்கலாம்! வெளியான தகவல்.

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4
Shana
4 years ago
நிதி அமைச்சராக விரைவில் பிரதமர் ரணில் பொறுப்பேற்கலாம்! வெளியான தகவல்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் நிதி அமைச்சராக பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.  

நிதி அமைச்சுப் பொறுப்பினை ஏற்க முன்னாள்  நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக நிதி அமைச்சினை தாமே பொறுப்பேற்க பிரதமர் ரணில் முன்வந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4