ஜோன்ஸ்டனை கைது செய்ய கோரி போராட்டம்: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை

Mayoorikka
4 years ago
ஜோன்ஸ்டனை கைது செய்ய கோரி போராட்டம்: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் குழுவினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
மே 09ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தார்.

இந்நிலையில், வாக்குமூலம் வழங்கியப்பின் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அங்கிருந்து வௌியேறியுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் சிஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்புகளை அகற்றியதை தொடர்ந்து இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4