இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க தீர்மானம்

#India #Kilinochchi
Prasu
4 years ago
இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க தீர்மானம்

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் 40 மில்லியன் பெறுமதியான உணவுப் பொட்டலங்கள் அடங்கியுள்ளதுடன், கிளிநொச்சி மக்களின் பொருளாதார வறுமை குறித்து அரசாங்கம் முன்னரே உணர்ந்துகொண்டதன் விளைவாக 20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாக  அரசாங்க அதிபர் கூறினார்.

இந்த நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் பொருத்தமான குடும்பங்களைத் தெரிவு செய்வதற்காக கிராம மட்டத்தில் முன்மொழிபவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4