யாழில் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதித்த பொலிஸார்!

Mayoorikka
4 years ago
யாழில் ஒலிபெருக்கிகளுக்கு  தடை விதித்த பொலிஸார்!

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் என்.பி. லியனகே தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளதன் காரணமாக, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4