இலங்கையில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு: தொடரும் இக் கட்டான நிலை

Mayoorikka
4 years ago
இலங்கையில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு: தொடரும் இக் கட்டான நிலை

இலங்கையில் ஏப்ரல் மாதத்தின் மொத்த பணவீக்க விகிதம் 33.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டிற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 190.3 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இது குறியீட்டு புள்ளிகளில் 17.6 அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுடன், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, இதன் குறியீடு 172.7 ஆக காணப்பட்டுள்ளது.

ஆண்டு அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் மொத்த பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 33.8 சதவீதமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4