95 ஒக்டென் பெற்றோலை நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் - வலுசக்தி அமைச்சர்

Reha
4 years ago
95 ஒக்டென் பெற்றோலை நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் - வலுசக்தி அமைச்சர்

95 ஒக்டென் பெற்றோலை நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, 95 ஒக்டென் பெற்றோல் பாவனையாளர்கள், 92 ஒக்டென் பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள பெற்றோல் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை, நாளை முதல் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டென் பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4