யாழில் அனர்த்தம் ஒருவர் உயிரிழப்பு: 10 பேர் பாதிப்பு
Mayoorikka
2 years ago

யாழ். மாவட்டத்தில் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் J 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் J 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், காரைநகர் J 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் என 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



