பாராளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது!

Mayoorikka
4 years ago
பாராளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது!

பாராளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று முழு பாராளுமன்றமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கூறியதாவது, இன்று பாராளுமன்றமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளார். அன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு எதிராக எமது பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எம்முடன் இணைந்து செயற்பட்டார். இப்போது தாக்கப்பட்டுள்ளார். பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4