ஆரியகுளத்தில்... வெசாக் கூடு : இராணுவத்தின் கோரிக்கை... நிராகரிப்பு. ஆளுநர்... எச்சரிக்கை!

#SriLanka #Governor
ஆரியகுளத்தில்... வெசாக் கூடு : இராணுவத்தின் கோரிக்கை... நிராகரிப்பு.  ஆளுநர்... எச்சரிக்கை!

ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டது.

அத்தோடு ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கட்டளையிட்டார்.

எனினும் நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழி ஊடாக சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது சபை கலைக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றும் சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அத்தோடு முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்தால் வேறு வழிகள் குறித்து பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4