இலங்கையில் துப்பாக்கிச் சூடு உத்தரவு-சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்!
Nila
3 years ago

துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையானது இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அதீத அதிகாரங்களை வழங்கும் அவசரகால சட்டத்தையும் இரத்து செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அமைதியான போராட்டக்காரர்களின் மனித உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும் மற்றும் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.



