தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

#SriLanka #Lockdown
Shana
4 years ago
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டில் நாளை 10 ஆம் திகதி காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளது..

அந்த வகையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது குறித்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

, குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில், புகையிரத கடவைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்கள் மற்றும் கடலோரங்களில் ஒன்றுகூடுவதற்கோ அல்லது உலாவுவதற்கோ முழுமையாக தடை விதிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4