புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வௌியான அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வௌியான அறிவிப்பு

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4