டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - 1,102 டெங்கு நோயால் பாதிப்பு

#Disease
Prasu
4 years ago
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - 1,102 டெங்கு நோயால் பாதிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 17,405 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 8,936 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாகவும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் அடையாளம் காணப்பட்ட 207 நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் 121 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 121 பேரும், காலி மாவட்டத்தில் 112 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 103 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4