வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சி; கட்டுநாயக்காவில் சிக்கிய ஐவர்
#SriLanka
#Airport
#Arrest
Mugunthan Mugunthan
3 years ago

சட்டவிரோத கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சித்த ஐந்து இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தாம் தப்பிச்செல்ல முயன்றதாக சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.



