அரிசியை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! 50 இலட்சம் அபராதம்! கடும் சிறை

Mayoorikka
4 years ago
அரிசியை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! 50 இலட்சம் அபராதம்! கடும் சிறை

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அரிசியை அதிக விலைக்கு விற்றால் 50 லட்சம் ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளை - சிவப்பு நாடு அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 220 ரூபாயாகவும், 

வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 230 ரூபாயாகவும், 

கீரி சம்பா கிலோகிராம் ஒன்றின் விலை 260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4