மஹிந்தானந்தவின் தாக்குதலில் நபரொருவர் வைத்தியசாலையில்

Prathees
4 years ago
மஹிந்தானந்தவின் தாக்குதலில் நபரொருவர் வைத்தியசாலையில்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அவரது ஒருங்கிணைப்பு செயலாளரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலக்கானதாக  கூறப்படும் நபர் ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி, வெட்டகெதெனிய பிரதேசத்தில் உள்ள சமகி ஜன பலவேகயவின் செயற்பாட்டாளர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து அவரும் அவரது மனைவியும் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அப்பகுதியிலுள்ள விழாவொன்றில் கலந்துகொண்டிருந்த போது, தானும்  கணவரும் நடாத்தும் கடைக்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமகி ஜன பலவேக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இதற்கு முன்னரும் அமைச்சரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் அவ்வாறான தாக்குதலை மேற்கொள்ளவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிடுகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4