இலங்கையில் மே தினக் கூட்டங்களின் போது வன்முறைகள் வெடிக்கும் அபாயம் ! அமெரிக்கா எச்சரிக்கை

Nila
4 years ago
இலங்கையில் மே தினக் கூட்டங்களின் போது வன்முறைகள் வெடிக்கும் அபாயம் ! அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் வன்முறைகள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளைய தினம் மேதினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. 
 
இதன் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
 
கொழும்பில் பல்வேறு வடிவங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால்  நாள் முழுவதும் வீதி மூடல் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
 
சில ஆர்ப்பாட்டங்கள் பற்றி அமெரிக்க தூதரகம் அறிந்திருப்பதாகவும், ஆனால் இலங்கை முழுவதும் மேலதிக போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நாளையதினம் கொழும்பின் பல பகுதிகளில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பல் அமெரிக்க தூதரகம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அமைதியான முறையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் கூட மோதலாக மாறி வன்முறையாக மாறக்கூடும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4