இலங்கையில் எரிபொருள் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியாகியது.

Nila
4 years ago
இலங்கையில் எரிபொருள் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியாகியது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசையில் மக்கள் காந்திருந்தும் எரிபொருளை பெறாமல் திரும்பும் நிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இதேவேளை கடந்த சில மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட தடவை எரிபொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பல்வேறு துறைகளும் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றன.
இவ்வாறான நிலையில் சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களில் கடந்த சில வாரங்களாக போதுமான அளவு டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பு இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

வாகனச் சாரதிகள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் தேவைப்படும் போது வரிசையில் காத்திருக்காமல் எரிபொருள் நிரப்ப முடியும் என்று கூறுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு தெரிவித்தாலும் யாழில் தற்போதும் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4