ஸ்பெயினில் வரலாறு காணாத வெப்பம் - ஆயிரக்கணக்கானோர் பலி!

#SriLanka #heat #European #Spain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
ஸ்பெயினில் வரலாறு காணாத வெப்பம் - ஆயிரக்கணக்கானோர் பலி!

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் வெப்ப அலையின் காரணமாக ஸ்பெயினில் ஏறக்குறைய 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பம் தொடர்பில் கணக்கிடப்படும் பதிவுகள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இவ்வருடத்தின் ஜுன் மாதத்தில் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சகத்தின் தினசரி இறப்பு கண்காணிப்பு அமைப்பு, ஜூன் மாதத்தில் 1,028 இறப்புகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

பெரும்பாலும் அதிகளவிலான முதியவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறிப்பாக 1,022 இறப்புகள் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே நிகழ்ந்துள்ளன; இதில் 720 இறப்புகள் 85 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!